< Back
டென்னிஸ்
டென்னிஸ்
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்; சாம்பியன் பட்டம் வென்றார் ஆண்ட்ரே ரூப்லெவ்
|6 May 2024 3:36 PM IST
களிமண் தரை போட்டியான மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்றது.
மாட்ரிட்,
களிமண் தரை போட்டியான மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்றது. இந்த தொடரின் கடைசி நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நடைப்பெற்றது. இந்த ஆட்டத்தில் முன்னணி வீரரான ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிமை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 4-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த ரூப்லெவ், அடுத்த இரு செட்களை 7-5, 7-5 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இதன் மூலம் ரூப்லெவ் 4-6, 7-5, 7-5 என்ற புள்ளிக்கணக்கில் பெலிக்ஸ் ஆகர் அலியாசிமை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.