மாட்ரிட் ஓபன் டென்னிஸ்; ஆண்ட்ரே ரூப்லெவ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
|களிமண் தரை போட்டியான மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
மாட்ரிட்,
களிமண் தரை போட்டியான மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூப்லெவ் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பிரிட்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவின் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் செக் குரிய்ரசின் ஜிரி லெஹெக்கா கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிமை எதிர்கோண்டார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டின் போது ஜிரி லெஹெக்கா காயம் காரணமாக வெளியேறியதால் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம், ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் உடன் மோத உள்ளார்.