< Back
டென்னிஸ்
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ்; இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்

Image Courtesy: AFP

டென்னிஸ்

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ்; இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
29 April 2024 10:20 PM IST

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.

மாட்ரிட்,

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் ஸ்பெயினின் சாரா சொரிப்ஸ் டார்மோவை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட இகா ஸ்வியாடெக் 6-1, 6-0 என்ற நேர் செட் கணக்கில் சாரா சொரிப்ஸ் டார்மோவை எளிதில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இகா ஸ்வியாடெக் நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் பிரேசிலின் பீட்ரிஸ் ஹடாத் மியாவை எதிர்கொள்ள உள்ளார்.

மேலும் செய்திகள்