< Back
டென்னிஸ்
டென்னிஸ்
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ்; கார்லஸ் அல்காரஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
|29 April 2024 3:57 AM IST
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
மாட்ரிட்,
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 32 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் பிரேசிலின் தியாகோ செய்போத்தை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட கார்லஸ் அல்காரஸ் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பிரேசிலின் தியாகோ செய்போத்தை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட ஆப் 16) முன்னேறினார்.