< Back
டென்னிஸ்
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ்; ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா இணை தோல்வி

image courtesy:AFP

டென்னிஸ்

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ்; ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா இணை தோல்வி

தினத்தந்தி
|
1 May 2024 1:52 AM IST

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.

மாட்ரிட்,

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 32 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை - ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சன் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டா இணையை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்ட போபண்ணா இணை 6-7 (4-7), 5-7 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சன் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டா இணையிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறியது.

மேலும் செய்திகள்