< Back
டென்னிஸ்
டென்னிஸ்
லேவர் கோப்பை டென்னிஸ்: முன்னணி வீரரான ரபேல் நடால் விலகல்
|14 Sept 2024 4:06 PM IST
நடால் கடைசியாக பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் விளையாடினார்.
மாட்ரிட்,
லேவர் கோப்பை டென்னிஸ் தொடர் வரும் 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை ஜெர்மனியில் உள்ள பெர்லினில் நடைபெற உள்ளது. இதில் பல முன்னணி வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் இந்த தொடரிலிருந்து விலகுவதாக ஸ்பெயின் முன்னணி வீரரான ரபேல் நடால் அறிவித்துள்ளார். இவர் கடைசியாக பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் விளையாடினார். அதன்பின் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.