< Back
டென்னிஸ்
டென்னிஸ்
கொரியா ஓபன் டென்னிஸ்: ராடு ஆல்பட், டெனிஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்..!
|28 Sept 2022 10:19 PM IST
கொரியா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சியோலில் நடந்து வருகிறது.
சியோல்,
கொரியா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சியோலில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மால்டோவா வீரர் ராடு ஆல்பட், அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சனுடன் மோதினார். இந்த போட்டியில் ராடு ஆல்பட் 7-6 (7-3), 7-6 (7-3) என்ற செட் கணக்கில் ஜான்சனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்பெயின் வீரர் ஜவுமி மூனார், கனடாவின் டெனிஸ் ஷபோவலோவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் ஷபோவலோவ் 7-5, 6-4 என்ற செட் கணக்கில் மூனாரை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
நாளை மறுநாள் நடைபெற உள்ள காலிறுதி ஆட்டத்தில் ராடு ஆல்பட், டெனிஸ் ஷபோவலோவ் மோதுகின்றனர்.