< Back
டென்னிஸ்
ஓய்வு முடிவை அறிவித்த ரோஜர் பெடரர்- கோலி, பாண்டியா உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து
டென்னிஸ்

ஓய்வு முடிவை அறிவித்த ரோஜர் பெடரர்- கோலி, பாண்டியா உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து

தினத்தந்தி
|
15 Sept 2022 9:43 PM IST

ரோஜர் பெடரருக்கு விராட் கோலி, தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட முன்னணி கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னை,

சர்வதேச டென்னில் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களில் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் இன்று தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். முன்னாள் நம்பர் ஒன் வீரரான பெடரர் இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.

இதில் 8 விம்பிள்டன் மகுடமும் அடங்கும். தரவரிசையில் 310 வாரங்கள் நம்பர் ஒன் இடத்தை பிடித்தவர் என்ற சாதனைக்கும் ரோஜர் பெடரர் சொந்தக்காரர் ஆவார். 2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சுவீஸ் வீரர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் ரோஜர் பெடரருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் விராட் கோலி, தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் இதயப்பூர்வமான பதிவின் மூலம் ரோஜர் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். அவரின் இந்த பதிவின் கமெண்ட் பகுதியில் கோலி "எல்லா காலத்திலும் சிறந்தவர். கிங் ரோஜர்," என்று பதிவிட்டுள்ளார்.



இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ஒரு சிறந்த வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார். தினேஷ் கார்த்திக்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் ரோஜருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.



மேலும் செய்திகள்