< Back
டென்னிஸ்
கொரியா ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஆஸ்டாபென்கோ
டென்னிஸ்

கொரியா ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஆஸ்டாபென்கோ

தினத்தந்தி
|
25 Sept 2022 1:58 AM IST

கொரியா ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டியில் லாத்வியா வீராங்கனை ஜெலினா ஆஸ்டாபென்கோ இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

சியோல்,

கொரியா ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி சியோலில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் பிரெஞ்ச் ஓபன் முன்னாள் சாம்பியனான லாத்வியா வீராங்கனை ஜெலினா ஆஸ்டாபென்கோ, கடந்த ஆண்டு (2021) அமெரிக்க ஓபனை வென்றவரான எம்மா ரடுகானுவை (இங்கிலாந்து) எதிர்கொண்டார்.

இதில் ஆஸ்டாபென்கோ 4-6, 6-3, 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது எம்மா ரடுகானு காயம் காரணமாக விலகினார். இதனால் ஆஸ்டாபென்கோ இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு அரைஇறுதியில் தரவரிசையில் 24-வது இடத்தில் இருக்கும் எகதேரினா அலெக்சாண்ட்ரோவா (ரஷியா) 6-2, 6-4 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் தாட்ஜனா மரியாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

மேலும் செய்திகள்