< Back
டென்னிஸ்
கனடா ஓபன் டென்னிஸ்: முன்னணி வீரர்கள் டேனில் மெத்வதேவ் மற்றும் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி

Image Courtesy: AFP

டென்னிஸ்

கனடா ஓபன் டென்னிஸ்: முன்னணி வீரர்கள் டேனில் மெத்வதேவ் மற்றும் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி

தினத்தந்தி
|
12 Aug 2022 12:05 AM IST

நிக் கிர்கியோஸ் உலகின் முதல் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான டேனில் மெத்வதேவை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார்.

ஒட்டாவா,

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட டென்னிஸ் விளையாட்டின் மிக முக்கிய தொடரான அமெரிக்க ஓபன் இந்த மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இதற்கு முன்னதாக கனடா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில்

இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் முன்னணி வீரர்கள் டேனில் மெத்வதேவ் மற்றும் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறியுள்ளனர். நிக் கிர்கியோஸ் 6-7(2), 6-4, 6-2 என்ற செட் கணக்கில் உலகின் முதல் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான டேனில் மெத்வதேவை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார்.

அதே போல் மற்றொரு முதல் சுற்றில் ஜாக் டிராப்பர் 7-5 7-6 என்ற செட் கணக்கில் சிட்சிபாஸை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். கனடா ஓபனின் முதல் சுற்றிலே முன்னணி வீரர்கள் வெளியேறியுள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் செய்திகள்