< Back
டென்னிஸ்
ஐ.டி.எப். டென்னிஸ்: தமிழக வீரர் ராம்குமார் சாம்பியன்

பட்டம் வென்ற ராம்குமார் (இடது), 2-வது இடம் பிடித்த திக்விஜய்

டென்னிஸ்

ஐ.டி.எப். டென்னிஸ்: தமிழக வீரர் ராம்குமார் 'சாம்பியன்'

தினத்தந்தி
|
23 Oct 2023 3:12 AM IST

ஐ.டி.எப். டென்னிஸ் போட்டியில் தமிழக வீரர் ராம்குமார் 'சாம்பியன்' பட்டம் வென்றார்.

தார்வாத்,

கர்நாடக மாநிலம் தார்வாத் நகரில் ஐ.டி.எப். டென்னிஸ் போட்டி நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் ராம்குமார் 7-6 (7-5), 7-6 (8-6) என்ற நேர் செட்டில் சக நாட்டவர் திக்விஜய் பிரதாப் சிங்கை தோற்கடித்து சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றார்.

இந்த வெற்றியின் மூலம் சென்னையைச் சேர்ந்த ராம்குமாருக்கு ரூ.3 லட்சம் பரிசுத்தொகையுடன் 20 தரவரிசை புள்ளிகளும் கிடைத்தது. தொடர்ந்து கர்நாடகா டென்னிஸ் சங்கம் சார்பில் நடந்த பாராட்டு விழாவில், ஆசிய விளையாட்டில் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றதற்காக ராம்குமாருக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்