< Back
டென்னிஸ்
டென்னிஸ்
இத்தாலி ஓபன் டென்னிஸ்: ஸ்வெரேவ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்
|20 May 2024 4:03 PM IST
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்வெரேவ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
ரோம்,
களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி ரோமில் நடந்தது. பல முன்னணி வீரர்கள் இடம் பெற்றிருந்த இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) மற்றும் நிகோலஸ் ஜாரி (சிலி) முன்னேறினர்.
இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ஸ்வரெவ் 6-4 மற்றும் 7-5 என்ற நேர் செட்டில் நிகோலஸ் ஜாரியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.