< Back
டென்னிஸ்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: சிட்சிபாஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்
டென்னிஸ்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: சிட்சிபாஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
19 May 2023 6:13 PM IST

இத்தாலியன் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது.

ரோம்,

இத்தாலியன் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், குரோஷியா வீரர் போர்னா கோரிக்குடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சிட்சிபாஸ் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் போர்னா கோரிக்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டத்தில் சிட்சிபாஸ், ரஷிய வீரர் மெத்வதேவ் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

மேலும் செய்திகள்