< Back
டென்னிஸ்
டென்னிஸ்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: ரைபகினா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்
|14 May 2023 6:30 AM IST
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் ரைபகினா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
இத்தாலி,
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 3-வது சுற்றில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி, கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபகினாவுடன் மோதினார். இந்த போட்டியில் ரைபகினா 7-6 (7-4), 6-1 என்ற செட் கணக்கில் ஜாஸ்மினை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷிய வீராங்கனை அனஸ்தசியா பொடாபோவா, சக நாட்டு வீராங்கனையான வெரோனிகா குடர்மெட்டோவாவுடன் மோதினார். இந்த போட்டியில் குடர்மெட்டோவா 7-5, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் அனஸ்தசியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.