< Back
டென்னிஸ்
இத்தாலி ஓபன் டென்னிஸ்: வெற்றியுடன் தொடங்கிய ரபேல் நடால்

image courtesy: AFP

டென்னிஸ்

இத்தாலி ஓபன் டென்னிஸ்: வெற்றியுடன் தொடங்கிய ரபேல் நடால்

தினத்தந்தி
|
10 May 2024 2:19 AM IST

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.

ரோம்,

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் 'நம்பர் ஒன்' வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஜிசோ பெர்க்சை (பெல்ஜியம்) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் தகுதி சுற்று மூலம் முன்னேறிய பிரான்செஸ்கோ பாசரோ (இத்தாலி) 6-7 (3-7), 7-5, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் ஆர்தர் ரின்டர்கெனிச்சை (பிரான்ஸ்) போராடி தோற்கடித்தார்.

மேலும் செய்திகள்