< Back
டென்னிஸ்
இத்தாலி ஓபன் டென்னிஸ்: நம்பர் 1 வீரர் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

image courtesy: AFP

டென்னிஸ்

இத்தாலி ஓபன் டென்னிஸ்: நம்பர் 1 வீரர் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

தினத்தந்தி
|
13 May 2024 12:52 AM IST

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

ரோம்,

பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 'நம்பர் ஒன்' வீரரான ஜோகோவிச் ( செர்பியா), அலெஜான்ட்ரோ டேபிலோ (சிலி) உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

இந்த ஆட்டத்தில் யாரும் எதிர்பாரத விதமாக ஜோகோவிச்சுக்கு எதிராக முழு ஆதிக்கம் செலுத்திய டேபிலோ 6-2 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று ஜோகோவிச்சிற்கு அதிர்ச்சி அளித்தார். இதன் மூலம் ஜோகோவிச் இந்த தொடரிலிருந்து வெளியேறினார்.

மேலும் செய்திகள்