< Back
டென்னிஸ்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டி: அரைஇறுதிக்குள் நுழைந்தார் மெட்விடேவ்
டென்னிஸ்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டி: அரைஇறுதிக்குள் நுழைந்தார் மெட்விடேவ்

தினத்தந்தி
|
19 May 2023 4:15 AM IST

ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் வெற்றி பெற்றார்.

ரோம்,

இத்தாலியன் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ், ஜெர்மனியின் யானிக் ஹான்மானை சந்தித்தார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த அட்டத்தில் தொடக்கம் முதலே மெட்விடேவ் ஆதிக்கம் செலுத்தினார். இந்த ஆட்டத்தில் 6-2, 6-2 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் யானிக் ஹான்மானை விரட்டியடித்து அரைஇறுதிக்கு மெட்விடேவ் தகுதி பெற்றார்.

மேலும் செய்திகள்