< Back
டென்னிஸ்
இத்தாலி ஓபன் டென்னிஸ்: மேடிசன் கீஸ் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

image courtesy: AFP

டென்னிஸ்

இத்தாலி ஓபன் டென்னிஸ்: மேடிசன் கீஸ் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
11 May 2024 11:41 PM IST

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் மேடிசன் கீஸ் 4-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

kரோம்,

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான மேடிசன் கீஸ் (அமெரிக்கா), பீட்ரிஸ் ஹடாட் மியா (பிரேசில்) உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை மேடிசன் கீஸ் கைப்பற்றிய நிலையில், 2-வது செட்டை பீட்ரிஸ் ஹடாட் மியா கைப்பற்றினார். இதனால் 3-வது செட் பரபரப்புக்குள்ளானது. அதனை கீஸ் கைப்பற்றி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். முடிவில் கீஸ் இந்த ஆட்டத்தில் 6-0, 4-6 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இவர் தனது அடுத்த ஆட்டத்தில் சொரானா சிர்ஸ்டியா உடன் மோத உள்ளார்.

மேலும் செய்திகள்