இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
|இத்தாலியன் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது.
ரோம்,
இத்தாலியன் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் 33-ம் நிலை வீரரான டிமிட்ரோவை (பல்கேரியா) வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். மற்ற ஆட்டங்களில் கேஸ்பர் ரூட் (நார்வே), ஹேல்ஜர் ரூனி (டென்மார்க்), பிரான்சிஸ்கோ செருன்டோலோ (அர்ஜென்டினா) ஆகியோரும் வெற்றி கண்டனர்.
இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-2, 6-0 என்ற நேர்செட்டில் லிசி சுரேங்காவை (உக்ரைன்) தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற ஆட்டங்களில் வான்ட்ரோசோவா (செக்குடியரசு), ஆஸ்டாபென்கோ (லாத்வியா) ஆகியோரும் 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தனர்.