< Back
டென்னிஸ்
டென்னிஸ்
இத்தாலி ஓபன் டென்னிஸ்; சாம்பியன் பட்டம் வென்றார் இகா ஸ்வியாடெக்
|19 May 2024 8:40 PM IST
இறுதிப்போட்டியில்போலந்தின் இகா ஸ்வியாடெக், பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா உடன் மோதினார்.
ரோம்,
பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் 2 முறை சாம்பியனும், நம்பர் 1 வீராங்கனையுமான போலந்தின் இகா ஸ்வியாடெக், பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய ஸ்வியாடெக் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இதன்மூலம் 3-வது முறையாக ஸ்வியாடெக் இத்தாலி ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.