< Back
டென்னிஸ்
இத்தாலி ஓபன் டென்னிஸ்; இகா ஸ்வியாடெக் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

Image Courtesy: AFP

டென்னிஸ்

இத்தாலி ஓபன் டென்னிஸ்; இகா ஸ்வியாடெக் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
10 May 2024 6:40 AM IST

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.

ரோம்,

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 64 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் அமெரிக்காவின் பெர்னார்டா பேரா உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட ஸ்வியாடெக் 6-0, 6-2 என்ற செட் கணக்கில் பெர்னார்டா பேராவை வீழ்த்தி அடுத்த சுற்றான ரவுண்ட் ஆப் 32 சுற்றுக்கு முன்னேறினார்.

மேலும் செய்திகள்