< Back
டென்னிஸ்
டென்னிஸ்
இத்தாலி ஓபன் டென்னிஸ்; ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா இணை அதிர்ச்சி தோல்வி
|15 May 2024 6:59 AM IST
களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.
ரோம்,
பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை இத்தாலியின் சிமோன் பொலேல்லி - ஆண்ட்ரியா வவசோரி இணையை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்ட போபண்ணா இணை 2-6, 4-6 என்ற செட் கணக்கில் சிமோன் பொலேல்லி - ஆண்ட்ரியா வவசோரி இணையிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறியது.