< Back
டென்னிஸ்
இத்தாலி ஓபன் டென்னிஸ்; அரினா சபலென்கா காலிறுதிக்கு முன்னேற்றம்

Image Courtesy: AFP

டென்னிஸ்

இத்தாலி ஓபன் டென்னிஸ்; அரினா சபலென்கா காலிறுதிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
14 May 2024 9:52 AM IST

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.

ரோம்,

பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா உக்ரைனின் எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 4-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த சபலென்கா அடுத்த இரு செட்களை 6-1, 7-6 (9-7) என்ற புள்ளிக்கணக்கில் எலினா ஸ்விடோலினாவை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் அரினா சபலென்கா காலிறுதிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் அரினா சபலென்கா லாத்வியாவின் ஜெலினா ஓஸ்டபென்கோ உடன் மோத உள்ளார்.

மேலும் செய்திகள்