< Back
டென்னிஸ்
டென்னிஸ்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி
|16 May 2023 3:44 AM IST
இத்தாலியன் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது.
ரோம்,
இத்தாலியன் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 3-6, 6-7 (4-7) என்ற நேர்செட்டில் 135-ம் நிலை வீரர் பாபியன் மாரோஸ்சனிடம் (ஹங்கேரி) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.
இதன் மூலம் சர்வதேச போட்டியில் தொடர்ந்து 12 வெற்றிகளை பெற்று இருந்த அல்காரசின் வீறுநடை முடிவுக்கு வந்தது.
இதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் 6-2, 2-6, 4-6 என்ற நேர்செட்டில் உக்ரைனின் அஹெலினா காலினியாவிடம் வீழ்ந்தார்.