< Back
பிற விளையாட்டு
இந்தோனேசிய மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்
பிற விளையாட்டு

இந்தோனேசிய மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்

தினத்தந்தி
|
23 Jan 2024 1:02 AM IST

ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் எம்.ஆர்.அர்ஜூன்-துருவ் கபிலா இணை, மலேசியாவின் கோக் சி பெய் ஜோடியுடன் மோதுகிறது.

ஜகர்த்தா,

இந்தோனேசிய மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜகர்த்தாவில் இன்று முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் சிங்கப்பூரின் லோக் கீன் யியை எதிர்கொள்கிறார்.

மேலும் உலக தரவரிசையில் 19-வது இடத்தில் உள்ள இந்திய இளம் வீரர் லக்ஷயா சென், சீனாவின் வெங் ஹாங் யங்குடன் மோதுகிறார். மற்ற இந்திய வீரர்களான ஸ்ரீகாந்த், மலேசியாவை சேர்ந்த லீ ஜீ ஜியாவையும் , பிரியன்ஷூ ரஜாவத், டென்மார்க்கை சேர்ந்த ரஸ்முஸ் ஜெம்கிகையும் தங்களது முதல் சுற்றில் சந்திக்கின்றனர்.

மேலும் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் எம்.ஆர்.அர்ஜூன்-துருவ் கபிலா இணை, மலேசியாவின் கோக் சி பெய் ஜோடியுடன் மோதுகிறது. இதில் ஆசிய விளையாட்டு சாம்பியனும், சமீபத்தில் நடந்த மலேசிய ஓபன், இந்திய ஓபனில் 2-வது இடம் பிடித்த இந்திய ஜோடியுமான சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி இந்த போட்டியில் இருந்து விலகி உள்ளனர்.

மேலும் செய்திகள்