< Back
டென்னிஸ்
டென்னிஸ்
இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அல்காரஸ் சாம்பியன்
|18 March 2024 5:12 AM IST
இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டேனில் மெட்விடேவ், கார்லஸ் அல்காரஸ் உடன் மோதினார்.
இண்டியன்வெல்ஸ்,
இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் 4-ம் நிலை வீரர் டேனில் மெட்விடேவ் (ரஷியா), நடப்பு சாம்பியனும், 2-ம் நிலை வீரருமான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) உடன் மோதினார்.
இந்த போட்டியில் அல்காரஸ் 7-6 (7-5), 6-1 என்ற செட் கணக்கில் மெத்விடேவை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். அவருக்கு ரூ.9 கோடியே 12 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.