< Back
டென்னிஸ்
இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: மெட்விடேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

image courtesy: BNP Paribas Open twitter

டென்னிஸ்

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: மெட்விடேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
19 March 2023 6:18 AM IST

இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

இண்டியன்வெல்ஸ்,

இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரைஇறுதி போட்டியில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ், அமெரிக்க வீரர் பிரான்சிஸ் தியாஃபோவுடன் மோதினார்.

இந்த போட்டியில் மெட்விடேவ் 7-5, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் பிரான்சிஸை வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் முதல் முறையாக இண்டியன் வெல்ஸ் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

மேலும் செய்திகள்