< Back
டென்னிஸ்
டென்னிஸ்
இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக், கோகோ காப் அரையிறுதிக்கு முன்னேற்றம்
|15 March 2024 8:40 AM IST
இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
கலிபோர்னியா,
இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு காலிறுதி ஆட்டத்தில் போலந்து வீராங்கை இகா ஸ்வியாடெக் டென்மாரிக்கின் கரோலின் வோஸ்னியாக்கி உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-4 என இகா ஸ்வியாடெக் கைப்பற்றினார். இதையடுத்து நடைபெற்ற 2வது செட்டில் 1-0 என ஸ்வியாடெக் முன்னிலையில் இருந்த போது காயம் காரணமாக கரோலின் வோஸ்னியாக்கி வெளியேறினார். இதன் மூலம் ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெற்ற மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ காப் சீனாவின் யுவான் யுஇ உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கோகோ காப் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் யுவான் யுஇ-யை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.