< Back
டென்னிஸ்
இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: டேனியல் மெத்வதேவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

Image Courtesy: AFP

டென்னிஸ்

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: டேனியல் மெத்வதேவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
15 March 2024 1:21 PM IST

இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

கலிபோர்னியா,

இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ரஷியாவை சேர்ந்த டேனியல் மெத்வதேவ் டென்மார்க்கின் ஹோல்கர் ரூனேவை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய மெத்வதேவ் 7-5, 6-4 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் ஹோல்கர் ரூனேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

வரும் 17ம் தேதி நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் டாமி பால் - டேனியல் மெத்வதேவ், ஜன்னிக் சின்னெர் - கார்லஸ் அல்காரஸ் ஆகியோர் மோத உள்ளனர்.

மேலும் செய்திகள்