< Back
டென்னிஸ்
டென்னிஸ்
இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்; டேனியல் மெத்வதேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
|17 March 2024 10:37 AM IST
இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
கலிபோர்னியா,
பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ரஷியாவின் முன்னணி வீரரான டேனியல் மெத்வதேவ் அமெரிக்காவின் டாமி பால் உடன் மோதினர்.
இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 1-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த மெத்வதேவ் அடுத்த இரு செட்களை 7-6 (7-3), 6-2 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ரஷியாவின் மெத்வதேவ் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸை எதிர்கொள்ள உள்ளார்.