< Back
டென்னிஸ்
இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: அல்காரஸ், சின்னர் அரைஇறுதிக்கு முன்னேற்றம்

image courtesy: BNP Paribas Open twitter

டென்னிஸ்

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: அல்காரஸ், சின்னர் அரைஇறுதிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
18 March 2023 2:20 AM IST

இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

இண்டியன்வெல்ஸ்,

இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற கால்இறுதி சுற்று ஒன்றில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், கனடா வீரர் அகர் அலிசிமெவை சந்தித்தார். இந்த போட்டியில் கார்லஸ் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அகரை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு கால்இறுதியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சுடன் மோதினார். முதல் செட்டை 6-4 என சின்னர் கைப்பற்றினார். அடுத்த செட்டை 6-4 என பிரிட்ஸ் வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 6-4 என்ற கணக்கில் சின்னர் கைப்பற்றினார்.

இதன்மூலம் 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் சின்னர் வென்று அரைஇறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெற உள்ள அரைஇறுதியில் அல்காரஸ், சின்னருடன் மோத உள்ளார்.

மேலும் செய்திகள்