< Back
டென்னிஸ்
டென்னிஸ்
இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: அலெக்சாண்டர் ஸ்வெரேவ், ஜானிக் சின்னர் கால்இறுதிக்கு முன்னேற்றம்
|14 March 2024 4:44 AM IST
நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜானிக் சின்னர், பென் ஷெல்டனுடன் மோதினார்.
இண்டியன்வெல்ஸ்,
இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், 3-ம் நிலை வீரருமான ஜானிக் சின்னர் (இத்தாலி), பென் ஷெல்டனுடன் (அமெரிக்கா) மோதினார்.
இந்த போட்டியில் ஜானிக் சின்னர் 7-6 (7-4), 6-1 என்ற செட் கணக்கில் பென் ஷெல்டனை போராடி வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார். 22 வயதான சின்னர் தொடர்ச்சியாக பெற்ற 18-வது வெற்றி இதுவாகும்.
மற்றொரு போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், ஆஸ்திரேலியா வீரர் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார். இந்த போட்டியில் ஸ்வெரெவ், 5-7, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் அலெக்ஸ் டி மினாரை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.