< Back
டென்னிஸ்
டென்னிஸ்
இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ்; 20 வயது வீரருக்கு எதிராக அதிர்ச்சி தோல்வி கண்ட ஜோகோவிச்
|12 March 2024 12:15 PM IST
செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலியின் 20 வயது வீரரான லூகா நார்டி உடன் மோதினார்.
கலிபோர்னியா,
பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 32 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலியின் 20 வயது வீரரான லூகா நார்டி உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் 6-4 என்ற புள்ளிக்கணக்கில் ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்த நார்டி அடுத்த சுற்றில் 3-6 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்ந்தார். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 6-3 என்ற புள்ளிக்கணக்கில் 20 வயதான லூகா நார்டி முன்னணி வீரரான ஜோகோவிச்சை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.