இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
|இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
இண்டியன்வெல்ஸ்,
இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவ் 7-6 (7-3), 6-1 என்ற நேர் செட் கணக்கில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரேயை வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), ஜானிக் சின்னெர் (இத்தாலி), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்குள் நுழைந்தனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-3,6-0 என்ற நேர்செட்டில் டெனியல் காலின்சை (அமெரிக்கா) தோற்கடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்டாபென்கோ (லாத்வியா) 7-5, 3-6, 3-6 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரிடம் வீழ்ந்தார். மேடிசன் கீஸ் (அமெரிக்கா), கலின்ஸ்கயா (ரஷியா) ஆகியோர் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.