< Back
டென்னிஸ்
டென்னிஸ்
இண்டியன்வெல்ஸ் ஓபன்: மேத்வதேவ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
|11 March 2024 10:43 AM IST
மேத்வதேவ் 3-வது சுற்று ஆட்டத்தில் செபாஸ்டியன் கோர்டா உடன் மோத உள்ளார்.
இண்டியன்வெல்ஸ்,
பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் டேனியல் மேத்வதேவ் (ரஷ்யா), ராபர்டோ கார்பலேஸ் பேனா (ஸ்பெயின்) உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய மேத்வதேவ் 6-2 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இவர் தனது 3-வது சுற்று ஆட்டத்தில் செபாஸ்டியன் கோர்டா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.