< Back
டென்னிஸ்
இண்டியன்வெல்ஸ் ஓபன்: இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்

Image : AFP 

டென்னிஸ்

இண்டியன்வெல்ஸ் ஓபன்: இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
13 March 2024 8:26 PM IST

இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது

கலிபோர்னியா,

பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் யூலியா புதின்சேவாவுடன் மோதினார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்வியாடெக் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

மேலும் செய்திகள்