< Back
டென்னிஸ்
இண்டியன்வெல்ஸ் ஓபன்: வெற்றியுடன் தொடங்கிய ஆண்டி முர்ரே

image courtesy: AFP

டென்னிஸ்

இண்டியன்வெல்ஸ் ஓபன்: வெற்றியுடன் தொடங்கிய ஆண்டி முர்ரே

தினத்தந்தி
|
8 March 2024 9:20 AM GMT

முர்ரே அடுத்த ஆட்டத்தில் ஆண்டி ரூப்லெவ் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

இண்டியன்வெல்ஸ்,

இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஆண்டி முர்ரே ( இங்கிலாந்து), டேவிட் கோபின் (பெல்ஜியம்) உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய முர்ரே 6-3 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் டேவிட் கோபினை வீழ்த்தி இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளார்.

முர்ரே அடுத்த ஆட்டத்தில் ஆண்டி ரூப்லெவ் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

மேலும் செய்திகள்