< Back
டென்னிஸ்
டென்னிஸ்
இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: கேஸ்பர் ரூட்டை வீழ்த்தி டாமி பால் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
|15 March 2024 6:38 AM IST
இன்று நடைபெற்ற கால்இறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீரர் டாமி பால், நார்வே வீரர் கேஸ்பர் ரூட்டுடன் மோதினார்.
இண்டியன்வெல்ஸ்,
இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற கால்இறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீரர் டாமி பால், நார்வே வீரர் கேஸ்பர் ரூட்டுடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் டாமி பால், 6-2, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் கேஸ்பர் ரூட்டை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.