< Back
டென்னிஸ்

image courtesy: BNP Paribas Open twitter
டென்னிஸ்
இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் ரைபகினா சாம்பியன்..!

20 March 2023 6:30 AM IST
இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
இண்டியன்வெல்ஸ்,
இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா, பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்காவுடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ரைபகினா 7-6 (13-11), 6-4 என்ற செட் கணக்கில் சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன் மூலம் முதல் முறையாக எலினா ரைபகினா இண்டியன்வெல்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். மேலும் கஜகஸ்தானில் இருந்து இண்டியன்வெல்ஸ் பட்டத்தை முதல் முறையாக வென்றவர் என்ற பெருமையையும் பெற்றார்.