< Back
டென்னிஸ்
இண்டியன்வெல்ஸ் ஓபன்: முதல் சுற்றில் இந்திய வீரர்  ஸ்மித் நாகல் தோல்வி

Image : AFP 

டென்னிஸ்

இண்டியன்வெல்ஸ் ஓபன்: முதல் சுற்றில் இந்திய வீரர் ஸ்மித் நாகல் தோல்வி

தினத்தந்தி
|
8 March 2024 5:58 PM IST

இந்திய வீரர் ஸ்மித் நாகல், கனடாவின் மிலியோஸ் ரவ்னிக்குடன் மோதினார்.

வாஷிங்டன்,

இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று போட்டியில் இந்திய வீரர் ஸ்மித் நாகல், கனடாவின் மிலியோஸ் ரவ்னிக்குடன் மோதினார்.

இதில் மிலியோஸ் 6-3, 6-3 என்ற செட்களில் ஸ்மித் நாகலை வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.முன்னணி வீரர் ரபேல் நடால் போட்டியில் இருந்து விலகியதால் ஸ்மித் நாகலுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்