< Back
டென்னிஸ்
டென்னிஸ்
ஹாங்சோ ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய இணை
|25 Sept 2024 8:58 AM IST
ஹாங்சோ ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய இணை சாம்பியன் பட்டம் வென்றது.
பீஜிங்,
ஹாங்சோ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிஆட்டத்தில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன் - விஜய் சுந்தர் பிரசாந்த் இணை, ஜெர்மனியின் கான்ஸ்டான்டின் பிரான்ட்சன் - ஹென்ட்ரிக் ஜெபன்ஸ் ஜோடியுடன் மோதியது.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 4-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த இந்திய இணை, ஆட்டத்தின் அடுத்த இரு செட்களை 7-6 (7-5), 10-7 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது.
இறுதியில் இந்த ஆட்டத்தில் 4-6, 7-6 (7-5), 10-7 என்ற செட் கணக்கில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன் - விஜய் சுந்தர் பிரசாந்த் இணை வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.