< Back
டென்னிஸ்
ஹாங்சோ ஓபன் டென்னிஸ்: ஹோல்கர் ரூனே அதிர்ச்சி தோல்வி

image courtesy: AFP

டென்னிஸ்

ஹாங்சோ ஓபன் டென்னிஸ்: ஹோல்கர் ரூனே அதிர்ச்சி தோல்வி

தினத்தந்தி
|
22 Sept 2024 8:53 AM IST

ஹாங்சோ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.

பீஜிங்,

ஹாங்சோ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஹோல்கர் ரூனே (டென்மார்க்), ஜப்பானை சேர்ந்த யசுடாகா உச்சியாமா உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஹோல்கர் ரூனே யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 5-7, 4-6 என்ற செட் கணக்கில் யசுடாகா உச்சியாமாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.

மேலும் செய்திகள்