< Back
டென்னிஸ்
டென்னிஸ்
ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி: போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் விலகல்
|2 July 2023 5:11 AM IST
காய்ச்சல் காரணமாக ஹாம்பர்க் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக ஸ்வியாடெக் அறிவித்துள்ளார்.
பெர்லின்,
ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் நடைபெறும் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டியில் போலந்து நாட்டைச் சேர்ந்த முன்னனி டென்னிஸ் வீராங்கனை இகா ஸ்வியாடெக் விளையாடி வந்தார். இவர் அண்மையில் முடிவடைந்த பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
இந்நிலையில் காய்ச்சல் காரணமாக ஹாம்பர்க் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக ஸ்வியாடெக் அறிவித்துள்ளார். நேற்று நடைபெற இருந்த மகளிர் ஒற்றையர் அரை இறுதிப் போட்டியில் இத்தாலி வீராங்கனை லூசியா பிரான்செட்டியுடன் மோத இருந்த ஸ்வியாடெக், காய்ச்சல் மற்றும் உணவு நச்சுத்தன்மை காரணமாக போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.