< Back
டென்னிஸ்
ஹாலே ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜன்னிக் சின்னெர்

Image Courtesy: AFP

டென்னிஸ்

ஹாலே ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜன்னிக் சின்னெர்

தினத்தந்தி
|
22 Jun 2024 9:20 PM IST

நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஜன்னிக் சின்னெர், போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்ஸ் உடன் மோத உள்ளார்.

பெர்லின்,

ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் ஜன்னிக் சின்னெர், சீனாவின் ஸ்ஹாங் ஸிஷென் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜன்னிக் சின்னெர் 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் சீனாவின் ஸ்ஹாங் ஸிஷெனை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஜன்னிக் சின்னெர், போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்ஸ் உடன் மோத உள்ளார்.

மேலும் செய்திகள்