< Back
டென்னிஸ்
டென்னிஸ்
ஹாலே ஓபன் டென்னிஸ்: ஹூபர்ட் ஹர்காக்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
|22 Jun 2024 8:17 PM IST
ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.
பெர்லின்,
ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்ஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹூபர்ட் ஹர்காக்ஸ் 7-6 (7-2), 6-4 என்ற புள்ளிக்கணக்கில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.