< Back
டென்னிஸ்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஸ்வெரேவ் கால்இறுதிக்கு முன்னேற்றம்

அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (image courtesy: Roland-Garros twitter)

டென்னிஸ்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஸ்வெரேவ் கால்இறுதிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
4 Jun 2024 6:06 AM IST

இன்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், ஹோல்கர் ரூன் உடன் மோதினார்.

பாரீஸ்,

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் களிமண் தரை மைதானங்களில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக் சாம்பியனான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), ஹோல்கர் ரூன் உடன் (டென்மார்க்) மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஸ்வெரேவ் 4-6, 6-1, 5-7, 7-6 (7-2), 6-2 என்ற செட் கணக்கில் ரூனை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெற உள்ள கால்இறுதி போட்டியில் ஸ்வெரேவ், 11-ம் நிலை வீரர் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதுகிறார்.

மேலும் செய்திகள்