< Back
டென்னிஸ்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; கலப்பு இரட்டையர் பிரிவில் வாலிசென் - சீகமன்ட் இணை சாம்பியன்

Image Courtesy: AFP

டென்னிஸ்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; கலப்பு இரட்டையர் பிரிவில் வாலிசென் - சீகமன்ட் இணை சாம்பியன்

தினத்தந்தி
|
7 Jun 2024 3:34 PM IST

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

பாரீஸ்,

முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் பிரான்சின் ரோஜர் வாலிசென் - ஜெர்மனியின் லாரா சீகமன்ட் இணை, அமெரிக்காவின் டேசிரா கிராவ்சிக் - இங்கிலாந்தின் நியல் ஸ்குப்ஸ்கி இணையை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாலிசென் - சீகமன்ட் இணை 6-4, 7-5 என்ற செட் கணக்கில் டேசிரா கிராவ்சிக் - நியல் ஸ்குப்ஸ்கி இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

மேலும் செய்திகள்