< Back
டென்னிஸ்
டென்னிஸ்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் தமிழக வீரர் ஸ்ரீராம் பாலாஜி 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
|2 Jun 2024 12:09 AM IST
ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஸ்ரீராம் பாலாஜி - ரியேஸ் வரேலா ஜோடி 3-வது சுற்றுக்கு முன்னேறியது.
பாரீஸ்,
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பாரீசில் களிமண் தரையில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீராம் பாலாஜி - ரியேஸ் வரேலா மார்ட்டினஸ் (மெக்சிகோ) ஜோடி, பிரான்சின் டேன் ஆடட் - தியோ அரிபேஜ் ஜோடியுடன் மோதியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஸ்ரீராம் பாலாஜி - ரியேஸ் வரேலா ஜோடி 6-4, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் டேன் - தியோ ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறியது.