பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக், மெட்வடேவ் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்
|பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்வியாடெக், மெட்வடேவ் 4வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
பாரீஸ்,
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் மகளிர் ஒற்றையர் ஆட்டம் ஒன்றில் இகா ஸ்வியாடெக் மற்றும் டான்கா கோவினிக் விளையாடினர்.
இந்த போட்டியில், 6-3, 7-5 என்ற செட் கணக்கில் ஸ்வியாடெக் வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு முன்னேறினார். இது அவருக்கு 31வது தொடர்ச்சியான வெற்றியாகும்.
இதேபோன்று ஆடவர் ஒற்றையர் போட்டி ஒன்றில் டேனில் மெட்வடேவ் மற்றும் மியோமிர் கெக்மனோவி விளையாடினார்கள். இந்த போட்டியில், 6-2, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் 3வது சுற்றில் வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு மெட்வடேவ் முன்னேறியுள்ளார்.
மரின் சிலிக் மற்றும் கைல்ஸ் சைமன் ஆகியோர் பங்கு பெறும் 3வது சுற்று போட்டியின் முடிவில் வெற்றி பெறும் வீரருக்கு எதிராக அடுத்த சுற்று போட்டியில் மெட்வடேவ் விளையாடுவார்.