< Back
டென்னிஸ்
டென்னிஸ்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீரர் அல்காரஸ் சாம்பியன்
|10 Jun 2024 2:03 AM IST
இறுதிப் போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் , ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் ஆகியோர் மோதினர்.
பாரீஸ்,
முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்ட பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் , ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் ஆகியோர் மோதினர்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு வீரர்களும் சிறப்பாக விளையாடினர். இருப்பினும் கடைசி இரு செட்களிலும் கார்லஸ் அல்காரஸ் ஆதிக்கம் செலுத்தினார். இதனால் 6-3, 2-6, 5-7,6-1,6-2 என்ற செட் கணக்கில் அல்காரஸ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்..